இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு..


இந்தோனேசியாவில் தனிபர் தீவுப் பகுதியில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியது.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், “இந்தோனேசியாவில் வடகிழக்குப் பகுதியில் உள்ள தனிபர் தீவுப் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு 1.14 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியது. இந்த நில நடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை. நில நடுக்கம் ஏற்பட்டபோது இரண்டு, மூன்று அதிர்வுகளை உணர்ந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளன.

சென்னை வங்கியில் 30 லட்சம் கொள்ளை..

காவல்துறை வாகனங்களை உயரதிகாரிகளின் குடும்பத்தினர் பயன்படுத்துகிறார்களா?: உயர்நீதிமன்றம் கேள்வி..

Recent Posts