பீகாரில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ‘மாப்பிள்ளைச் சந்தை’ (படம்) குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 700 ஆண்டுகளாக இந்தச் சந்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
பீகாரில் உள்ள மதுபானி மாவட்டத்தில் இந்த மாப்பிள்ளைச் சந்தை என்ற வினோத நிகழ்வு நடைபெறுகிறது. அரச மரத்தடியில் ஒன்பது நாள்கள் நடக்கும் இந்தச் சந்தையில் பங்கேற்பவர்கள் இந்நிகழ்வை ‘சவுரத் சபா’ என்றும் அழைக்கிறார்கள். குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்கின்றனர். திருமணத்துக்குத் தயாராக உள்ள மணமகன்கள் ஒரு மேடையில் அமர வைக்கப்படுகிறார்கள்.
மாப்பிள்ளைகளின் கல்வித்தகுதி, குடும்பப் பின்னணி ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இளம் பெண்களுக்கு வரன் தேடும் பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள் அப்பெண்களுக்கு ஏற்ற மணமகனைத் தேர்வு செய்கிறார்கள். இந்த நவீன சுயம்வரத்தில் பங்கேற்கும் ஆண்கள் வேட்டி, ஜீன்ஸ், சட்டை அணிந்து வரலாம். மற்ற உடைகளுக்கு அனுமதி இல்லை.
மணமகனைத் தேர்ந்தெடுத்த பின்னர், இருதரப்பு விவரங்களும் கல்வித்தகுதிக்கான ஆவணங்க ளும் சரிபார்க்கப்படுகின்றன. மணம கனைப் பிடித்திருந்தால் அவருக்காக நிர்ணயிக்கப்பட்ட சிறு தொகையை நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு அளிக்க வேண்டும். வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கும் நோக்கத்துடன் இந்தச் சந்தை ஆண்டாண்டு காலமாக நடத்தப்படுவதாக மூத்த குடிமக்கள் தெரிவிக்கின்றனர்.