முக்கிய செய்திகள்

ஆய்வாளர் பெரிய பாண்டியன் உடலுக்கு முதல்வர் அஞ்சலி..


ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரிய பாண்டியன் உடல் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அவரின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தினர்.

காவல் துறை அதிகாரிகள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவுள்ளனர். மாலை 6-மணிக்கு ஆய்வாளர் பெரிய பாண்டியன் உடல் மதுரைக்கு விமானத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. மதுரையிலிருந்து வாகனம் மூலமாக சொத்த ஊருக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.