முக்கிய செய்திகள்

சர்வதேச கிரிக்கெட் : 50வது சதம் அடித்தார் விராட் கோலி..


Colombo: India’s Virat Kohli plays a shot against Sri Lanka during the 4th ODI match in Colombo, Sri Lanka, on Thursday. PTI Photo by Manvender Vashist (PTI8_31_2017_000176A) *** Local Caption ***

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 50வது சதத்தை பதிவு செய்துள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் கோலி இந்த சாதனையை புரிந்தார். 98 ரன்கள் எடுத்திருந்த போது லக்மல் வீசிய பந்தில் சிக்சர் விளாசிய கேப்டன் கோலி, டெஸ்ட் அரங்கில் 18வது சதத்தை பூர்த்தி செய்தார்.
இதுவரை ஒருநாள் போட்டிகளில் 32 சதமும், டெஸ்ட் போட்டிகளில் 18 சதமும் விளாசியுள்ள விராட் கோலி, அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 50 சதத்துடன் எட்டாவது இடத்தில் உள்ளார்.