சர்வதேச ஒற்றுமையை பறைசாற்றும் தினம் : யோகா தினத்தில் பிரதமர் மோடி உரை..

சர்வதேச யோகா தினமான இன்று (ஜூன் 21), சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றும் நாளாக அமைந்துள்ளதாக பிரதமர் மோடி பேசினார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா அறிவித்து கடந்த 5 ஆண்டகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று 6 ஆம் ஆண்டாக உலகம் முழுவதும் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ல், யோகா தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களிடம் அவர் உரையாற்றினார். அவர் பேசியதாவது:
6ஆவது சர்வதேச யோகா தினத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றும் நாளாக இது அமைந்துள்ளது.

வீட்டிலிருந்தபடியே குடும்பத்துடன் யோகா செய்யுங்கள். யோகா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கரோனா பரவல் அதிகமாக இருப்பதால் ஏராளமானோர் யோகா கற்றுக் கொள்ள ஆர்வம் கொண்டுள்ளார்கள். கொரோனாவை வீழ்த்த யோகா சிறந்த வழிமுறையாக இருக்கிறது.

உங்களது அன்றாட வாழ்வில் யோகாவை ஒரு அங்கமாக பழகுங்கள். இது, உடல் வலிமையுடன் மன வலிமையையும் மேம்படுத்துகிறது.

யோகாவிற்கு மதம், மொழி, நாடு என்ற எந்த பேதமும் இல்லை. யோகாவின் பயன்களை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த உலகம் தற்போது உணர்ந்துள்ளது.

பகவத் கீதையில் கூட யோகா குறித்து கிருஷ்ணர் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவில் இருந்து மீண்டு வர யோகா செய்யுங்கள். இவ்வாறு மோடி பேசினார்.

இந்தியாவில் ஒரே நாளில் 15,413 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ..

கரோனா தொற்று அதிகரிப்பு : திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று முதல் 10 நாட்களுக்கு அனைத்து கடைகளும் மூடல்

Recent Posts