11 வது ஐபிஎல் ஏலம்: தலா ரூ.11 கோடிக்கு விலை போன மணீஷ் பாண்டே, கே.எல்.ராகுலு

11-வது சீசன் ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றும், நாளையும் ஏலம் நடைபெறுகிறது. 360 இந்திய வீரர்கள் உட்பட 578 பேர் ஏலம் விடப்படுகின்றனர். 8 அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்றுள்ளனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப், கொல்கத்தா, டெல்லி, ராஜஸ்தான், பெங்களூரு அணிகளும் ஏலத்தில் பங்கேற்றுள்ளனர். 11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ம் தேதி முதல் மே 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தவானை தக்கவைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

* ஐ.பி.எல்.லில் முதல் வீரராக தவான் ரூ.5.2 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது. ஷிகர் தவானை ரூ.5.2 கோடி கொடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் தக்க வைத்துக் கொண்டது. பஞ்சாப் ஏலம் எடுத்த தவானை  மேட்ச் கார்டு சலுகையை பயன்படுத்தி தக்கவைத்துக்கொண்டது.

* அஸ்வினை ரூ.7.6 கோடிக்கு கொடுத்து பஞ்சாப் அணி ஏலம் எடுத்ததுள்ளது. 2017 ஐ.பி.எல். போட்டியில் புனே அணிக்காக அஸ்வின் விளையாடினார்.

* இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ரூ.12.50 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலம் எடுத்தது. 2017 ஐ.பி.எல். போட்டியில் பென் ஸ்டோக்ஸ் புனே அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

* தென்னாப்பிரிக்க வீரர் பாப் டூபிளசிஸ்ஸை ரூ.1.6 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது. 2017 ஐ.பி.எல். போட்டியில் புனே அணிக்காக விளையாடினார்.

* ரஹானேவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தக்க வைத்துக்கொண்டது. ரஹானேவை ரூ.4 கோடி கொடுத்து மேட்ச் கார்டு முறையில் தக்க வைத்துக்கொண்டுள்ளது.

* ஆஸ்திரேலியா வீரர் மிச்செல் ஸ்டார்க் ரூ.9.4 கோடிக்கு ஏலம் போயுள்ளார். ரூ.9.4 கோடி கொடுத்து ஸ்டார்க்கை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 2017-ல் பெங்களூரு அணிக்காக மிச்செல் ஸ்டார்க் விளையாடினார்.

* கிரன் பொல்லார்டை மேட்ச் கார்டு சலுகை மூலம் மும்பை இந்தியன்ஸ் தக்க வைத்துக்கொண்டது.  பொல்லார்டை ரூ 5.4 கோடி கொடுத்து மும்பை அணி வாங்கியுள்ளது.

* அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயிலை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை. அடிப்படை விலை ரூ 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் கெயிலை எந்த அணியும் வாங்கவில்லை.

* ஆஸ்திரேலியா வீரர் கிளன் மேக்ஸ்வெல்லை ரூ. 9 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் ஏலம் எடுத்துள்ளது. 2017-ல் பஞ்சாப் அணிக்காக மேக்ஸ்வெல் விளையாடினார்.

* இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கை ரூ.2 கோடி கொடுத்து சென்னை சூப்பர் சிங்ஸ் அணி வாங்கியுள்ளது. 2017 ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணிக்காக விளையாடினார்.

* வங்கதேச வீரர் ஷகீப் அல் ஹசனை ரூ.2 கோடி கொடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வாங்கியது. 2017 ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருந்தார்.

* இந்திய அணி வீரர் கவுதம் கம்பீரை ரூ.2.8 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. கொல்கத்தா அணி கேப்டனான இருந்து 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்று தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* மேற்கிந்திய வீரர் பிராவோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துக்கொண்டது. பிராவோவை ரூ.6.4 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. ஆனால் மேட்ச் கார்டு சலுகை மூலம் பிராவோவை சென்னை தக்க வைத்தது.

* நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனை ரூ.3 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வாங்கியது. மேட்ச் கார்டு சலுகை மூலம் கேன் வில்லியம்சனை தக்க வைத்துக்கொண்டது.

* ஐ.பி.எல். ஏலத்தில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் விலை போகவில்லை. ஜோ ரூட்டுக்கு ஆரம்ப விலையாக ரூ.1.5 கோடி நிர்ணயிக்கப்பட்டது.

* இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங்கை ரூ.2 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியுள்ளது. அதிக விலைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிர்ணயிக்கப்பட்ட ரூ.2 கோடிக்கு மட்டுமே யுவராஜ் சிங் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

* இந்திய அணி வீரர் கருண் நாயரை ரூ.5.6 கோடி கொடுத்து பஞ்சாப் அணி வாங்கியது. அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.5.6 கோடிக்கு கருண் நாயர் ஏலம் எடுக்கப்பட்டார்.
* இந்திய அணி வீரர் கே.எல்.ராகுலை ரூ.11 கோடி கொடுத்து கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி வாங்கியது. கே.எல்.ராகுலை கடும் போட்டிக்கு நடுவே ரூ 11 கோடிக்கு வாங்கியது. 2017 ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடினார்.

* இந்திய அணி வீரர் முரளி விஜய் இன்றைய ஏலத்தில் விலை போகவில்லை. முரளி விஜய்க்கு ஆரம்ப விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

* தென்னாப்பிரிக்காவின் அதிரடி வீரர் டேவிட் மில்லரை ரூ.3 கோடி எடுத்து கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி வாங்கியுள்ளது. மேட்ச் கார்டு சலுகை மூலம் டேவிட் மில்லரை தக்கவைத்துக் கொண்டது.

* ஆஸ்திரேலியா அணியின் வீரர் ஆரோன் பின்சை ரூ.6.2 கோடிக்கு கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 2017 ஐ.பி.எல். போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடினார்.

* நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கல்லமை ரூ.3.6 கோடிக்கு பெங்களூரு அணி ஏலம் எடுத்துள்ளது. 2017 ஐ.பி.எல். போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடினார்.

* இங்கிலாந்து அணி வீரர் ஜேசன் ராயை ரூ.1.5 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. குஜராத்  அணிக்காக 2017 ஐ.பி.எல். போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடினார்.

* ஆஸ்திரேலியா அணியின் அதிரடி வீரர் கிறிஸ் லின்னை ரூ.9.6 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது. 2017 ஐ.பி.எல். போட்டியிலும் கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருந்தார்.

* இந்திய வீரர் மணீஷ் பாண்டேவை ரூ.11 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வாங்கியது. அடிப்படை விலையான ரூ.1 கோடியிலிருந்து ரூ.11 கோடிக்கு ஐதராபாத் ஏலம் எடுத்துள்ளது.

* தென்னாப்பிரிக்க வீரர் ஹசீம் அம்லாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. ஹசீம் அம்லாவுக்கு அடிப்படை விலையாக ரூ.1.5 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

* தென்னாப்பிரிக்க வீரர் ஹசீம் அம்லாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. ஹசீம் அம்லாவுக்கு அடிப்படை விலையாக ரூ.1.5 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

* இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸை ரூ.7.4 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியது. 2017 ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணிக்காக விளையாடினார்.

* மேற்கந்திய தீவுகள் வீரர் கார்லஸ் பிரத்வைட்டை ரூ.2 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வாங்கியுள்ளது. டெல்லி அணிக்காக 2017 ஐ.பி.எல். போட்டியில் விளையாடினார்.

* ஆஸ்திரேலியா அணியின் ஷேன் வாட்சனை ரூ.4 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. 2017 ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடினார்.

* கேதர் ஜாதவை  ரூ7.80 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை அணி  

* நியூ ஸிலாந்து வீரர் கொலின் டி கிராண்ட்ஹாம்   ரூ2.20  கோடிக்கு வாங்கியது பெங்களூரு அணி  

* நியூ ஸிலாந்து வீரர் ஜேம்ஸ்  பால்க்னரை எந்த அணியும் வாங்கவில்லை 

* யூசுப் பதானை ரூ1.90 கோடிக்கு ஏலம் எடுத்தது  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

* நியூ ஸிலாந்து வீரர் கொலின் மன்ரோ   ரூ1.90  கோடிக்கு வாங்கியது டெல்லி அணி  

* ஸ்டூவர்ட் பின்னியை  ரூ.50லட்சத்திற்கு  ஏலம் எடுத்தது  ராஜஸ்தான்  அணி

* ஆஸ்திரேலியா  வீரர் மார்கஸ் ஸ்ட்னிஸை   ரூ6.20  கோடிக்கு தக்க வைத்தது பஞ்சாப் அணி  

* இங்கிலாந்து வீரர் மோயீன் அலியை ரூ1.70  கோடிக்கு வாங்கியது  பெங்களூரு அணி  

 

IPL 11th Season : Manispande and K.L.Rahul sell each Rs. 11 Cr

அட களவாணிப் பயலுகளா…!: வைரலாகும் ஸ்டாலின் பேச்சு…

கர்நாடகாவில் 70 பேர்கொண்ட காங்கிரஸ் பரப்புரைக் குழு: டி.கே.சிவக்குமார் தலைமையில் அமைத்தார் ராகுல்!

Recent Posts