முக்கிய செய்திகள்

ஐபிஎல் போராட்டத்தின் போது தாக்குதல்: நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இருவர் கைது

ஐ.பி.எல்.போராட்டத்தின் போது போலீசாரை தாக்கிய வழக்கில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சாரதிராஜா மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுபாகர் என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் இருவரும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதை திருவல்லிக்கேணி போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்.

போராட்டத்தின் போது போலீசாரை தாக்கிய முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சென்னை எண்ணூரைச் சேர்ந்த மதன்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார்

அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை நாளை (புதன்) நடைபெறுகிறது.

ipl-attack-2-persons-arrested