முக்கிய செய்திகள்

ஐபிஎல் ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் திரில் வெற்றி..


ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற சன் ரைஸர்ஸ் அணி கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார். பேட் செய்த சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை குவித்தது. ராயுடு 79 ரன்களும், ரெய்னா 53 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களே எடுத்தது. சென்னை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.