முக்கிய செய்திகள்

ஐ.பி.எல். கிரிக்கெட் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், 50-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கியது.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டகாரர் வாட்சன் 0(9) வெளியேறினார்.

அடுத்து வந்த டு பிளிஸ்சிஸ், ரெய்னா ஜோடி நிதானமாக விளையாடினர். டு பிளிஸ்சிஸ் 39, ரெய்னா 59 என வெளியேறினர்.

அடுத்து வந்த டோனி, ஜடேஜா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஜடேஜா 25 (10)
வெளியேறினார். டோனி 44 (22) ராயுடு 5 களத்தில் இருந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்து டெல்லி அணிக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இந்நிலையில் தற்போது களமிறங்கி ஆடிவரும் டெல்லி அணியின் ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி.. சென்னை அணி 80 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ஈட்டியது.