ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய சென்னை அணி 8வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது தகுதி சுற்றுப்போட்டி நடைப்பெற்றது.
இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி டெல்லி அணியின் சார்பில் பிரித்வி ஷா, ஷிகார் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.
அதில் பிரித்வி ஷா 5(6) ரன்களும், ஷிகார் தவான் 18(14) ரன்களும், அடுத்ததாக களமிறங்கி ஓரளவு ரன் சேர்த்த கொலின் முன்ரோ 27(24) ரன்களும்,
கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 13(18) ரன்களும், அக்ஷர் பட்டேல் 3(6) ரன்களும், ரூதர் போர்டு 10(12) ரன்களும், கீமோ பால் 3(7) ரன்களும்,
அதிரடியாக ஆடிய ரிஷாப் பாண்ட் 38(25) ரன்களும், டிரண்ட் போல்ட் 6(3) ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில்
இறுதியில் அமித் மிஸ்ரா 6(3) ரன்களும், இஷாந்த சர்மா 10(3) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
முடிவில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது.
சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக தீபக் சாஹர், ஹர்பஜன் சிங், ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், இம்ரான் தாஹிர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் சென்னை அணிக்கு 148 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பில் டூ பிளஸ்சிஸ், ஷேன் வாட்சன் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.
சிறப்பான துவக்கத்தை தந்த இந்த ஜோடியில் டூ பிளஸ்சிஸ் 37 பந்துகளில் தனது அரை சதத்தினை பதிவு செய்தநிலையில் 50 (39) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
அடுத்ததாக சுரேஷ் ரெய்னாவுடன் சேர்ந்து அதிரடியில் கலக்கிய ஷேன் வாட்சன் 31 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்திருந்த நிலையில் 50 (32) ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார். அதில் சுரேஷ் ரெய்னா 11(13) ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார்.
கேப்டன் டோனி, அம்பத்தி ராயுடு ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றது.
இறுதியில் வெற்றிபெற இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கேப்டன் டோனி 9(9) ரன்களில் கேட்ச் ஆனார்.
இறுதியில் அம்பத்தி ராயுடு 20(20) ரன்களும், பிராவோ 4(1) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
முடிவில் சென்னை அணி 19 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக டிரண்ட் போல்ட், அமித் மிஸ்ரா, அக்ஷர் பட்டேல், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதன்மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய சென்னை அணி 8வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.