முக்கிய செய்திகள்

ஐபிஎல் டி20 போட்டி: சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ்அணியும் மோதின.

சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 109 ரன்கள் வெற்றி இலக்காக நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயம் செய்துள்ளது.

டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி  பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது.
பின்னர் ஆடிய சென்னை அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்“றது.