ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டிகள்

ஐபிஎல் 2020 கிரிக்கெட்  போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும்: நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தகவல்..

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என ஐ.பி.எல். நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தகவல் தெரிவித்துள்ளார்.

போட்டி அட்டவணை குறித்த விரைவில் அறிவிப்பு வெளியாகும்;

துபாய், அபுதாபி, ஷார்ஜா நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். தொடர், கரோனா தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது