ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க சில நாடுகளுக்கு விலக்கு அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததுடன், அந் நாட்டிடம் கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது எனக்கூறியது.
நவ.,4க்கு பிறகு எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.
இருப்பினும், ஈரானிடம் எண்ணெய் வாங்குவது தொடரும் என இந்தியா கூறியது. இது தொடர்பாக அமெரிக்காவிடம் விளக்கியது.
இந்நிலையில், ஈரானிடம் எண்ணெய் வாங்கி கொள்ள, இந்திய, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளிக்க உள்ளதாகவும், இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் விரைவில் அறிவிப்பார் எனவும் தகவல் வெளியானது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ஈரானிடம் எண்ணெய் வாங்கி கொள்ள சில நாடுகளுக்கு விலக்கு அளிக்க பரிசீலனை நடந்து வருகிறது .
இதில், அந்தந்த நாட்டின் பிரச்னைகள் கவனத்தில் எடுத்து கொள்ளப்படுகிறது. எங்களின் ஈரான் கொள்கை குறித்து நட்பு நாடுகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்துவோம். ஈரானுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.