ஈரான்-ஈராக் எல்லையில் நிலநடுக்கம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 140 ஆக உயர்வு..


ஈரான்-ஈராக் நாடுகளின் எல்லைப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எல்லைப் பகுதியில் உணரப்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவாகி உள்ளது.
ஈராகின் ஹலாபஜி நகருக்கு வெளியே 32 கிலோமீட்டர் கடல் தொலைவில் மையப்புள்ளியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பெரும் சேதம் ஏற்படலாம் என்பதை எச்சரிக்கும் ஆரஞ்சு வண்ணம் அந்நாட்டில் காட்டப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 140 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் அளித்துள்ளனர். மேலும் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
எல்லைப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், பல உயிரிழப்புகள் ஏற்பட்ட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான்-ஈராக் நாடுகளில் உள்ள 8 கிராமங்கள் அதிமாக சேதமடைந்துள்ளதாகவும், அங்கு மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சர்பால்-இ ஜஹாப் நகரில் இருப்பதால், மீட்பு குழுக்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஈராக்கிய தலைநகரான பாக்தாத் நகரத்தில் ஏராளமான கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பாக்தாத் பகுதியில் நிலநடுக்கத்தின் தாக்கம் இல்லாததால், மக்கள் வெளியே வரத் தொடங்கியுள்ளனர். ​​ஆனாலும் அச்சத்துடனே இருப்பதாக பாக்தாத் பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
நிலநடுக்கம் குறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், முதல் சில நொடிகளில் உண்மையில் ஒரு குண்டு வெடிப்பு நடந்தது போல் இருந்ததாகவும், சில நிமிடங்களுக்கு பின்னரே நிலநடுக்கம் என்று உணர்ந்தாகவும் தெரிவித்துள்ளனர்.
ஈரான் மேற்கு நகரங்களான மெஹ்ரான் மற்றும் இலாமில் பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 14 மாகாணங்களில் நிலநடுக்கத்தின் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக ஈரானிய ஜஎல்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் உயிரிழப்புகள் உயரக்கூடும் என்று அச்சம் இருப்பதாக தாஸ்நிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் பரவலாக மழை தொடங்கியது..

இலவச நீட் பயிற்சி மையங்கள் ஏமாற்றும் வேலை : ராமதாஸ்..

Recent Posts