வரும் 15-ம் தேதி ஈரான் அதிபர் ஹூசைன் ரவுஹானி அரசு முறைப்பயணமாக இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்தியா வருமாறு ஈரான் அதிபருக்கு கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
இதைஏற்று ஈரான் அதிபர் ஹூசைன் ராவுஹானி இந்த வாரம் இந்தியா வருகை தர உள்ளார்.அப்போது இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு,வர்த்தகம் உள்ளிட்ட பல்வறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
