முக்கிய செய்திகள்

ஆன்மிக அரசியலுக்கு ரஜினிகாந்த் அளித்த விளக்கம்…

தனது ரசிகர்களை சந்தித்து வந்த நடிகர் ரஜினிகாந்த், இறுதி நாளான 31ம் தேதி நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று கூறியிருந்தார்.

மேலும் ஆன்மிக அரசியலில் ஈடுபடுவோம் என்று கூறியிருந்தார். இதற்கு பல சர்ச்சைகளும், விவாதங்களும் எழுந்தது. ரஜினியை பாரதிய ஜனதா கட்சி பின்னிருந்து இயக்குவதாக பலரும் கூறினார்கள். இதற்கு ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலுக்கு விளக்கம் கொடுத்துள்ளார். ஆன்மிக அரசியல் என்பது, உண்மையான, நேர்மையான, சாதி மதச்சார்பற்ற, நாணயமான, அறவழியில் அரசியல் செய்வது என்று கூறியிருக்கிறார். மேலும் கட்சியின் பெயர், சின்னம் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.