இருட்டு அறையில் முரட்டுக்குத்து
தமிழ் சினிமாவில் எப்போதும் புதிய முயற்சிகள் என்பது குறைவு. அதை விட தைரியமான முயற்சிகள் குறைவு என்றே சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம் சென்ஸார் கட்டுப்பாடுகள் தான், ஆனால், தற்போதெல்லாம் சர்வ சாதாரணமாக அடல்ட் காமெடி படங்கள் வரத் தொடங்கியுள்ளது.
அந்த வகையில் ஹரஹர மஹாதேவகி டீம் தன் அடுத்த படமான இருட்டு அறையில் முரட்டுக்குத்துவில் களம் இறங்கியுள்ளது. இந்த படமும் முந்தைய படத்தை போல் பக்தாள் ஆசையை நிறைவேற்றியதா? பார்ப்போம்.
கதைக்கரு
தமிழ் சினிமாவில் இதற்கு முன் இப்படி ஒரு படம் வந்துள்ளதா என்றால் சந்தேகம் தான். அந்த அளவிற்கு அடல்ட்ஸ் மட்டுமே பார்க்க வேண்டிய படம்.
கௌதம் கார்த்திக் ஒரு ப்ளே பாய், அவருக்கு பெண்ணே கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் ஒரு பெண் அவரை திருமணம் செய்ய சம்மதிக்கின்றார்.
ஆனால் தன்னுடன் ஒரு வாரம் டேட்டிங் வர வேண்டும் என அவர் கௌதமிடம் கண்டிஷன் போட, கௌதமும் தன் நண்பர் சாராவுடன் பாங்காக் செல்கின்றார்.
அப்போது ஒரு வீட்டில் ஒரு பலான பேயிடம் கௌதம், சாரா மாட்டிக் கொள்ள பிறகு என்ன ஆனது என்பதே இந்த இருட்டு அறையில் முரட்டுக்குத்து மீதிக்கதை.
படம் பற்றி ஒரு பார்வை
சந்தோஷ் ஏற்கெனவே ஹரஹர மஹாதேவகியில் அடல்ட் கண்டண்டில் கிங் எனறு நிரூபித்துவிட்டார். அதன் அடுத்தக்கட்டம் தான் இந்த இருட்டு அறையில் முரட்டுக்குத்து.
ஆனால் அதையும் முகம் சுளிக்கும் படி எங்கும் காட்டாதது சிறப்பு (இளைஞர்களுக்கு மட்டும்). பலான பேய் பலான ஆசையுடன் கௌதம், சாராவை அரெஸ்ட் செய்கிறது.
அங்கிருந்து படம் இன்னும் சூடுபிடிக்கின்றது, முதல் பாதி தேவையில்லாத பாடல்கள் கொஞ்சம் அலுப்பு தட்ட வைத்தாலும், அடுத்தடுத்த டபுள் மீனிங் வசனம், சில அப்படி இப்படி காட்சிகள் மூலம் கலக்கியுள்ளனர்.
சந்தோஷ் செம்ம ட்ரெண்டியான ஆள் போல, தற்போது நடக்கும் விஷயங்களை வைத்து காட்சிகள் பிடித்தது சூப்பர், அதிலும் வீட்டில் இருக்கும் போது பிக்பாஸ் போல் டைம் சொல்லி இடைவேளையில் கமல் வாய்ஸில் ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது என முடிப்பது செம்ம.
கௌதம் கெரியரில் மற்றொரு ஹிட் படம், அவருடன் நண்பராக வரும் சாரா தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவேற்பு. வேகவேகமாக வசனம் பேசினாலும் உடனே இளைஞர்களுக்கு ரீச் ஆகும் வசனத்தை பேசி கவர்கின்றார்.
அதிலும் இரண்டாம் பாதியில் பேய்க்கு கூட பயப்படாமல் அவர்கள் செய்யும் கலாட்டா, அதை தொடர்ந்து பேய் ஓட்ட வரும் மொட்டை ராஜேந்திரன் என கலகலப்பிற்கு பஞ்சம் இல்லை.
சரி படம் முழுவதும் காமெடி இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் குறிப்பாக இரண்டாம் பாதியில் கொஞ்சம் அலுப்பு தட்ட ஆரம்பிக்கின்றது. அதற்கு முக்கிய காரணம் பல பேய் படங்களில் பார்த்த டெம்ப்ளேட் காட்சிகள்.
ஒளிப்பதிவு செம்ம கலர்புல்லாக இருக்கின்றது, ஆனால் பாடல்கள் ஏதும் ரசிக்கும்படி இல்லை, படத்திற்கு வேகத்தடை தான்.
ப்ளஸ்
ரசிகர்கள் எதிர்ப்பார்த்த டபுள் மீனிங் வசனங்களுக்கு பஞ்சமில்லை. டார்க்கெட் ஆடியன்ஸை திருப்திப்படுத்தும் காட்சிகள்.
மொட்டை ராஜேந்திரன் வீட்டிற்குள் அடிக்கும் லூட்டி.
மைனஸ்
பல பேய் படங்களில் பார்த்து பழகி போன காட்சிகள், கான்செப்ட் மட்டுமே புதிது.
ஹரஹர மஹாதேவகியில் இருந்த கொண்டாட்டம் இதில் கொஞ்சம் குறைவு தான்.
மொத்தத்தில் டார்க்கெட் ஆடியன்ஸுகளுக்கு திருப்தி .