முக்கிய செய்திகள்

ஏர் இந்திய விமானங்கள் பாதுகாப்பானவை தானா? : நிர்வாகத்திடம் கேட்கும் விமானிகள்

ஏர் இந்தியா விமானங்கள் பயணிகளுக்கு பாதுகாப்பான நிலையில்தான் உள்ளனவா என அதில் பணிபுரியும் விமானிகளே நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அகில இந்திய விமானிகள் சங்கத்தின் சார்பில், ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக ஊழியர்களுக்கான ஜூலை மாத சம்பளம் தாமதமாவதாகவும், அதுகுறித்து நிர்வாகத்தின் தரப்பில் ஒருவார்த்தை கூட பேசப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊதியம் தாமதமாவது குறித்து ஊழியர்களுக்கு தகவல் கூட தெரிவிக்கவில்லை என்றும் அந்தக் கடித்தில் விமானிகள் வேதனை தெரிவித்துள்ளனர். போதிய நிதிவசதி இன்மையால் பழுதடைந்த விமானங்கள் அப்படியே போடப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டி, ஏர் இந்திய விமானங்கள் பாதுகாப்பான நிலையில்தான் உள்ளனவா என்றும் விமானிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Is Air India Safe: Pilots Ask Management