முக்கிய செய்திகள்

பிக்பாஸ் 3 சீசனில் அனுஷ்ஷ்ஷ்காவா…!

பிக்பாஸ் சீசன் 3ல் அனுஷ்காவா…

தகவலைக் கேட்டதும் அனைவரும் இப்படித்தான் ஆச்சரியத்தில் உறைகிறார்கள்… ஆனால் தமிழில் இல்லை தெலுங்கிலாம்…

பிக்பாஸ் இந்தியில் 12 சீசன் கடந்துவிட்டாலும் தமிழ், தெலுங்குவில் இரண்டு சீசன்கள்தான் வந்திருக்கிறது. மலையாளத்தில் சென்ற வருடம்தான் தொடங்கினார்கள். தமிழில் இரண்டு சீசனிலும் கமல் தொகுத்து வழங்க, மலையாளத்தில் மோகன்லால் தொகுத்து வழங்கினார். தெலுங்கில் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும் இரண்டாவது சீசனை நானியும் தொகுத்து வழங்கினார்கள். 

தற்போது தெலுங்கில் மூன்றாவது சீசன் தொடங்க இருக்கையில் அர்ஜுன் ரெட்டி விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, வெங்கடேஷ், நாகார்ஜுன் போன்ற சூப்பர்ஸ்டார்களை அணுகி இருக்கின்றனர். ஆனால் அனைவரும் பிஸி என்று கைவிரிக்க ஏன் அனுஷ்காவைக் கேட்க்கக்கூடாது என்று பிக்பாஸை ஒளிபரப்பும் மா டிவி அனுஷ்காவை அணுகியதாகத் தெரிகிறது. 

தெலுங்கு சினிமாவில் இதுதான் டாக் ஆஃப் தி டவுன். பாகுபலிக்குப் பிறகு பாகமதியில் மிரட்டி இருந்தவர் பெரிதாக ஏதும் படத்தில் நடிக்காமல் இருக்கிறார். ஒரு பக்கம் உடல் பருமனால் பட வாய்ப்புகள் இல்லை என்ற பேச்சும் அடிபடுகிறது, இன்னொரு பக்கம் பாகுபலி நடிகர் பிரபாஸுடன் திருமணம் நடைபெறவிருக்கிறது அதனால்தான் படங்களில் நடிக்காமல் இருக்கிறார் என்றும் கிசுகிசுக்கிறார்கள்.

எது எப்படியோ, தெலுங்கு சூப்பர் ஸ்டார்களுக்கு சற்றும் இளைத்தவர் இல்லை அனுஷ்கா ஷெட்டி. தமிழில் இரண்டு படம் மூலம் அறிமுகமானாலும் தெலுங்கு சினிமாதான் அனுஷ்காவைக் கொண்டாடியது. ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம், அனுஷ்காவுக்காக மட்டுமே படம் ஓடும் என்பதெல்லாம் தெலுங்கு சினிமாவில் அனுஷ்காவுக்கு முன்னரும் பின்னரும் எந்த நடிகைக்கும் வாய்த்திடாத ஒன்று.

அவர் பிக்பாஸ் சீசன் 3-இன் தொகுப்பாளராக வந்தால், தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களும் பார்க்கத் தவற மாட்டார்கள்!

அனுஷ்ஷ்ஷ்கா…. என்று அனைவரும் டிவி முன் வாய்பிளந்து அமர வாய்ப்பிருக்கிறது.