தீவிரமடையும் ஈரான் – இஸ்ரேல் மோதல் : 23 ஈரானியர் உயிரிழப்பு..


சிரியாவிலுள்ள ஈரான் ராணுவ நிலைகள் மீது இஸ்ரேலும், இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது ஈரானும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவது அந்த பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் இஸ்ரேவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியான கோலன் ஹைட்ஸில் பகுதியில் புதன்கிழமை ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் சிரியாவிலுள்ள ஈரான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் கூறியிருந்தது.

இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு ஈரான் படைகள் மீதும், அதன் நிலைகள் மீது 20 ராக்கெட்டுகளை செலுத்தி இஸ்ரேல் நடத்தியதாக தகவல் வெளியாகியது. இதனை இஸ்ரேல் அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர், பென்சமின் நெதன்யாகு கூறும்போது, ஈரான் அதன் எல்லையை மீறிவிட்டது. நாங்கள் அதற்கு பதிலடி அளித்தோம். எங்களை காயப்படுத்தியவர்களை பல மடங்கு நாங்கள் காயப்படுத்துவோம்” என்று கூறியுள்ளார்.

ஆனால் இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் குறித்து ஈரான் தரப்பில் எந்தவித பதிலும் அளிக்கப்படாமல் உள்ளது. எனினும் இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் பலியானதாவும், அதில் 8 பேர் ஈரானைச் சேர்ந்தவர்கள் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.