முக்கிய செய்திகள்

இஸ்லாமியர்கள் நாளை தொழுகையை தவிர்க்க வேண்டும் : இலங்கை அமைச்சர் வேண்டுகோள்..

இஸ்லாமியர்கள் நாளை ஜும்மா தொழுகையை தவிர்க்க வேண்டும் என்று இலங்கை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இஸ்லாமிய மக்களுக்கு அந்நாட்டு அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் உள்ள இஸ்லாமியர்கள் நாளை ஜும்மா தொழுகையை தவிர்க்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு நிலைமை கருதி இதனை அறிவித்துள்ளதாகவும்,

பயங்கரவாதிகள் பள்ளிவாசல்களைத் தாக்கும் அபாயம் இருப்பதாக பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளதால், இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எம்.எச். அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.