முக்கிய செய்திகள்

பொது இடங்களில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை..

நொய்டாவில் பொது இடங்களில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

அப்பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் பொது இடங்களில் தொழுகை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

மசூதி, தர்காக்கள் தவிர பொது இடங்களில் தடையை மீறி தொழுகை நடத்தினால் அதற்கு அந்த நிறுவனமே பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு பொது இடங்களில் தொழுகை நடத்த அனுமதி வழங்கும்படி சிலர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், அனுமதி அளிக்க ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார். தொழுகை மட்டுமின்றி வேறு எந்த மத நடவடிக்கைகளுக்கும் பொது இடங்களில் நடத்த அனுமதி கிடையாது

எனவும், அப்பகுதி நிறுவனங்களில் வேலை செய்யும் இஸ்லாமியர்கள்,தொழுகை நடத்த அனுமதி கேட்டால் வழங்கக் கூடாது எனவும், அது சட்டப்படி குற்றமாகும் என அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நொய்டா பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் பங்கஜ் சிங் கூறுகையில், பொது இடங்களில் தொழுகை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதை நடைமுறைபடுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.