இஸ்லாமிய பெண்களின் கண்ணியம் காக்கப்படும்: குடியரசுத் தலைவர் உரை..


முத்தலாக் மசோதா நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாக குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

2018-19ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.

இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு தொடக்க உரையாற்றினார். அப்போது மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களாக பட்ஜெட்டில் இடம்பெறுவன குறித்து பேசினார்.

அவற்றில் ஒன்று முத்தலாக் விவகாரம். முஸ்லீம் பெண்களுக்கு விவகாரத்து, இந்த நடைமுறை ஏற்கக்கூடியது அல்ல என்றும், இதனை அகற்றும் வகையில் மத்திய அரசு மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.