முக்கிய செய்திகள்

பூமியை செல்பி எடுத்து அனுப்பிய விண்கலம்..

An Israeli spacecraft on its maiden mission to the moon has sent its first selfie back to Earth, mission chiefs said on Tuesday.

The image showing part of the Beresheet spacecraft with Earth in the background was beamed to mission control in Yehud, Israel – 23,360 miles (37,600km) away, the project’s lead partners said.

நிலவை ஆராய இஸ்ரேல் அனுப்பிய விண்கலம் பூமியை செல்பி  எடுத்து அனுப்பி உள்ளது.

கடந்த மாதம் 22-ஆம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட பார்ஷீட் என்ற அந்த விண்கலம், நிலவை நோக்கி பயணித்து வருகிறது.

37,600 கிலோ மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த போது, பூமியை பார்ஷீட் படம் எடுத்து அனுப்பி உள்ளது.

நீலமும், வெண்மையும் கலந்து பந்து போல அந்தரத்தில் பூமி சுழலும் காட்சியை படம் பிடித்து அனுப்பி உள்ள பார்ஷீட் வருகிற ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி நிலவில் தரையிறங்குமென கணித்து உள்ளனர்.

100 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் ஏவப்பட்டுள்ள 585 கிலோ எடை கொண்ட அந்த விண்கலம், நிலவில் இறங்குவதோடு,

அதில் உள்ள ரோபா மூலம் ஆய்வும் நடத்த உள்ளதாக இஸ்ரேல் விண்வெளி ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.