முக்கிய செய்திகள்

இஸ்ரேல் விவகாரத்தில் டிரம்புக்கு எதிராக இந்தியா உட்பட 128 நாடுகள் வாக்களிப்பு..


1967ஆம் ஆண்டு நிகழ்ந்த மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான போரில் இஸ்ரேல், பாலஸ்தீனத்திடம் இருந்து கிழக்கு ஜெருசலேமை கைப்பற்றியது. இதற்குப் பின் அங்கு லட்சக்கணக்கான யூதர்களை குடி அமர்த்தியதுடன் ஜெருசலேமை தங்கள் தலைநகரமாகவும் இஸ்ரேல் அறிவித்துக்கொண்டது. ஆனால், சர்வதேச நாடுகள் இஸ்ரேலின் இந்த சுய தம்பட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரையில் இஸ்ரேல் நாட்டின் தலைநகரமாக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அறிவித்தார்.

மேலும், ஜெருசலேமிற்கு அதிகாரப்பூர்வமாக இந்த அங்கீகாரத்தை வழங்க இதுவே சரியான நேரம் என்றும் நிதர்சனமான உண்மைக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமே இது என்றும் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை விளக்கினார்.

டிரம்பின் இந்த நிலைபாட்டிற்கு சவுதி மற்றும் பாலஸ்தீனம் எதிர்ப்புகள் தெரிவித்து வந்த நிலையில், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்து, தனது வாழ்நாளில் பெரிய தவறை டிரம்ப் செய்துவிட்டார் என்று பாலஸ்தீன விடுதலை இயக்க செயலாளர் சாப் எரட்காட் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, டிரம்புக்கு எதிராக மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமில்லாமல், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், மலேசியா , இந்தோனேசியா போன்ற நாடுகளும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தன.

மேலும், டிரம்பின் முடிவுக்கு எதிராக ஆசிய நாடுகளிலும், இஸ்லாம் நாடுகளிலும், பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. துருக்கி நாட்டில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியில் ஈடுபட்டது, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், இந்த விவகாரத்தை எகிப்பு நாடு ஐநா சபை கூட்டத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் அதை உலக நாடுகளின் பொது வாக்கெடுப்புக்கு நடத்த ஐநா முடிவெடுத்தது.
தொடர்ந்து நேற்று நடந்த உலக நாடுகள் வாக்கெடுப்பில், இந்தியா உட்பட 128 நாடுகள், இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசுலேம் என்ற டிரம்பின் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று வாக்களித்தன. ஆனால், அமெரிக்காவின் நட்பு நாடுகளனான பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகள் ஆதரித்தன.

இதையடுத்து, இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசுலேம் என்ற டிரம்ப் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானத்தை ஐநா சபை நிறைவேற்றியது.