இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு : உச்சநீதிமன்றம் உத்தரவு..

விஞ்ஞானி நம்பி நாராயணன், இந்திய அறிவியலாளர் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் அதிகாரி ஆவார். கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டங்களில் முதன்மையாகச் செயல்பட்டவராவார்

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரோவின் ரகசிய தகவல்களை விற்றதாக விஞ்ஞானி நம்பி நாரயணன் மீது கேரள காவல்துறை வழக்குப்பதிந்து கைது செய்தது.

1994ம் ஆண்டு, நவம்பர் 30ம் தேதி. இஸ்ரோ விஞ்ஞானிகள் நாராயணன், சசிக்குமார் என 6 பேரை கைது செய்கிறது போலீஸ்.

இஸ்ரோ மையத்தில், அப்துல் கலாம் உள்ளிட்ட திறமையான விஞ்ஞானிகள் பலரும் திட எரிபொருளைப் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் தொழில்நுட்பத்தில் ஆய்வுசெய்தபோது,

திரவ எரிபொருள் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் திட்டத்தை வடிவமைத்த முக்கியமான விஞ்ஞானி நம்பி நாராயணன். இவரது தொழில்நுட்பத் திறமையின் காரணமாகவே,

தற்போது பி.எஸ்.எல்.வி ரக உள்நாட்டுத் தயாரிப்பு ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்பட்டுவருகின்றன.

இவர், அந்நிய நாட்டிடம் பணம் பெற்றுக்கொண்டு ராக்கெட் தொழில்நுட்பம் தொடர்பான ரகசியங்களை விற்பனை செய்ததாக, கடந்த 1994-ல் வழக்குத் தொடரப்பட்டது.

மாலத்தீவு உளவுப் பிரிவைச் சேர்ந்த மரியம் ரஷீதா, ஃபவுஸியா ஹுசேன் ஆகியோர் மூலமாக ரஷ்யா மற்றும் பாகிஸ்தானுக்கு இந்த ரகசியங்களை விற்பனைசெய்ததாக, 1994 நவம்பர் 30-ம் தேதி, கேரளா போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

அவருடன் சேர்த்து சந்திரசேகரன், எஸ்.கே.ஷர்மா ஆகிய கான்ட்ராக்டர்கள் உள்ளிட்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

50 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்ட நம்பி நாராயணனை கேரள மாநில உயர் காவல்துறை அதிகாரிகள் விசாரணை என்கிற பெயரில் டார்ச்சர் செய்தார்கள்.

பின்னர், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு தலைமை குற்றவியல் நீதிபதி மாற்றம்செய்தார். சி.பி.ஐ நடத்திய விசாரணையில், இந்த வழக்குக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்பது தெரியவந்ததால், அதை நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நம்பி நாராயணனுக்கு முக்கியப் பொறுப்புகள் எதுவும் கொடுக்காத நிலையில், 2001-ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.

இருப்பினும், தன்னை வழக்கில் சிக்கவைத்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடந்த 20 வருடங்களாக அவர் சட்டப் போராட்டம் நடத்திவருகிறார்.

தனது தொழில் திறமையை முடக்கும் வகையிலும் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட காவல்துறை உயரதிகாரிகள் சிபி மேத்யூஸ், விஜயன் ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்குமாறும்,

நஷ்டஈடு வழங்குமாறும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

திரவ எரிபொருள் மூலம் ராக்கெட்டுகளை விண்ணுக்குச் செலுத்தும் தொழில்நுட்பத்தின் முன்னோடியான நம்பி நாராயணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு,

கைது நடவடிக்கை தொடர்ந்ததால், அந்தத் தொழில்நுட்பத்தில் பல ஆண்டுகள் இந்தியா பின் தங்கியதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அதனால், இந்த வழக்கின் தீர்ப்பை நம்பி நாராயணன் மட்டுமல்லாமல், இஸ்ரோ விஞ்ஞானிகள் பலரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள்

திமுக முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்..

வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை..

Recent Posts