முக்கிய செய்திகள்

இலக்கை அடைய முடியாவிட்டாலும் விண்வெளி ஆய்வில் இது புதிய மைல்கல் தான் : தினகரன் பாராட்டு..

சந்திராயன் 2 திட்டத்தில் பணியாற்றிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய விஞ்ஞானிகளின் கடும் உழைப்பில் உருவான சந்திராயன்-2 எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாவிட்டாலும் இந்தியாவை பொறுத்தவரை

விண்வெளித்துறையில் இதுவும் இன்னொரு மைல்கல் தான் என்று ட்விட்டரில் பதிவிட்ட டிடிவி தினகரன்,

அடுத்த முறை நிச்சயமாக நாம் வெற்றி அடைவோம் என்கிற நம்பிக்கையை இந்த முயற்சி விதைத்திருக்கிறது என்றும்

130 கோடி இந்தியர்களின் பெருமையை உலக அரங்கில் உயர்த்துவதற்கு உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.