முக்கிய செய்திகள்

‘இசக்கி சுப்பையா ஒரு பெரிய ஆளே இல்லை’ : தினகரன் காட்டம்..

அமமுகவிலிருந்து வெளியேறி அதிமுகவில் இணையப் போவதாக முன்னாள் அமைச்சரும் அமமுகவின் முக்கிய நிர்வாகியுமான இசக்கி சுப்பையா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களின் கேள்விக்கு இசக்கி சுப்பையா ஒரு பெரிய ஆளே இல்ல என்றார் மேலும் அவர்

இசக்கி சுப்பையா பெரிய கான்ட்ராக்டர். அது உங்களுக்கே தெரியும். என்னிடம் வந்தே நிறைய தடவை சொல்லுவார்.

`எனக்கு 70 கோடிக்கு மேல் பில் பாக்கி இருக்கு. நான் கோர்ட்டுக்குப் போய்தான் வாங்க வேண்டி இருக்கிறது. வேலுமணி எனக்கு ரொம்ப பிரச்னை கொடுக்கிறார் என்று சொல்லுவார்’ என தினகரன் பேசியுள்ளார்.

நிர்வாகிகள் விலகுவதால் அமமுக வலுப்பெறும் எனவும் தெரிவித்தார்.