முக்கிய செய்திகள்

இங்க என்ன ரேசா நடக்குது… எம்எல்ஏ கூட்டத்துக்கு பின்னர் முதல்வரை அறிவிப்போம்: சீறிய சிந்தியா

மூன்று மாநில மாநில முதலமைச்சர்கள் தேர்வி விவகாரம் டெல்லியைப் பரபரப்பாக்கி இருக்கிறது.

இதில் மத்தியப் பிரதேச முதலமைச்சராக சீனியர் கமல்நாத்தா, ஜூனியர் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவா என்ற போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியைச் சந்தித்து விட்டு, கமல்நாத்தும், சிந்தியாவும் ம.பிக்கு புறப்பட்டு சென்றனர். எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு பின்னர் முதலமைச்சர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என இருவருமே செய்தியாளர்களிடம் கூறினர்.

இதில், “இது ரேஸ் இல்லங்க.. மத்திய பிரதேச மக்களுக்கு சேவை செய்யும் விவகாரம்… இப்ப போபால் போகிறேன்… எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கும்… இன்றே அறிவித்து விடுவோம்…” என்று சிந்தியா கொஞ்சம் சூடாகவே பதிலளித்து விட்டு சென்றார்.