இத்தாலியில் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவாவையும் (Genoa) தெற்கு ஃபிரான்சையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஜெனோவா நகரில் 1.2 கிலோமீட்டர் நீளமுள்ள உயர்மட்டப் பாலத்தில் ஒரு பகுதி நேற்று இடிந்து விழுந்தது.
இதில் பாலத்தின் மீது சென்ற பல்வேறு வாகனங்கள் பாலத்தின் கீழ் உள்ள ஆற்றங்கரை, ரயில்வே தண்டவாளம், மற்றும் இரண்டு கிடங்குகள் மீது விழுந்தன.
இதில் நேற்று ஒரு குழந்தை உட்பட 11 பேர் பலியானதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் கிரேன்கள் உள்ளிட்டவை மூலம் இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகின்றன.
பலர் உயிரிழந்த நிலையிலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் இதுவரை 38 பேர் உயிரிழந்ததாகவும், 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.