முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மீன் மழை ..


இலங்கை யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை மீன் மழை பெய்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் வீசிய ஓகி புயலால் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் இலங்கையிலும் மழை கொ ட்டித் தீர்த்தது. இதைத் தொடர்ந்து தெற்கு இலங்கை பகுதியில் நிலை கொண்டுள்ள வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக இலங்கையிலும் தென் தமிழகத்திலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கடந்த 2 நாட்களாக இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்கிறது. நல்லூர் பகுதியில் திங்கட்கிழமை இரவு பெய்த மழையில் ஆயிரக்கணக்கான மீன்கள் தரையில் கொட்டின.

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மீன் மழை பெய்திருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் இரண்டாவது முறையாக மீன் மழை பெய்திருக்கிறது.