முக்கிய செய்திகள்

வரிஏய்ப்பாளர்களின் சொர்க்கமாக சுவிட்சர்லாந்து இனி இருக்காது: ஜெட்லி ஜிவ்….

வரி ஏய்ப்பவர்களின் புகலிடமாகவும் சொர்க்கமாகவும் சுவிட்சர்லாந்து இனி இருக்காது என நிதியமைச்சர் ஜெட்லி தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து அப்படி இருந்த நிலை மாறி, வங்கிகளில் பணம் போட்டிருப்பவர்களின் விவரத்தை வெளியிட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

அருண் ஜேட்லி பேஸ்புக் பதிவில், வரி ஏய்ப்பவர்களின் புகலிடமாகவும், பணம் போட்டிருப்போர் விவரங்களை வெளியிடாததாகவும் இருந்த சுவிட்சர்லாந்து, அந்த நிலையை மாற்றக் குறிப்பிடத் தக்க முயற்சிகளை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பணம்போட்டிருப்போர் விவரங்களை சுவிட்சர்லாந்து வெளியிட்டு வருவதால் இனி அது வரி ஏய்ப்பவர்களின் புகலிடமாக நெடுங்காலத்துக்கு இருக்காது என்றும் அருண் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார். வரி ஏய்த்து முறையற்ற வழிகளில் கிடைத்த பணத்தைச் சேர்த்து வைக்கும் இடம் சுவிட்சர்லாந்து என்கிற தோற்றம் தகரத் தொடங்கியுள்ளதாகவும் அருண் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

Jaitley Reaction in Black Money Issue