ஜல்லிக்கட்டு வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்..


ஜல்லிக்கட்டு வழக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு வழக்கை 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். முன்னதாக தமிழக அரசின் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பீட்டா வழக்கு தொடர்ந்தது.

கடந்த ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டு ஆதரவாக தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் தன்னெழுச்சி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் விளைவாக அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்தது. இந்நிலையில் தமிழக அரசின் சட்ட திருத்தத்தை எதிர்த்து பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மத்திய பட்ஜெட் மூலம் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளது: ப.சிதம்பரம்

கருக்கலைப்பு விவகாரம்:மருத்துவமனைகளுக்கு ராதாகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை..

Recent Posts