செய்தியாளர் மாயமான விவகாரத்தில் சவுதி அரேபிய தூதரகத்தில் இரண்டாவது முறையாக துருக்கி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் சவுதி அரேபிய செய்தியாளராக பணியாற்றிய ஜமால் கசோக்கி,
கடந்த 2-ஆம் தேதி அன்று துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்கு சென்றார்.
ஆனால் அதன் பின்னர் அவர் மாயமான நிலையில், கசோக்கியை தூதரகத்தில் வைத்து 15 பேர் கொண்ட கும்பல் சித்ரவதை செய்து கொன்று விட்டதாக துருக்கி ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து ஏற்கனவே ஒரு முறை தூதரகத்தில் விசாரணை நடத்திய துருக்கி போலீசார், வியாழன் அன்று மீண்டும் சோதனை நடத்தி உள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து சவுதி மற்றும் துருக்கி அரசுகளுடன் ஆலோசனை நடத்திய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவின் அறிக்கைக்கு பின்னர் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.