ஜம்மு நகரில் இயல்பு நிலை திரும்பி உள்ளதால் ஊரடங்கு உத்தரவு வாபஸ்

காஷ்மீர் மாநிலம்  ஜம்மு நகரில் இயல்பு நிலை திரும்பி உள்ளதால் ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

புல்வாமா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து ஜம்முவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வன்முறை சம்பவங்கள் நடந்ததை அடுத்து  ராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் போராட்டங்கள் ஓய்ந்து, இயல்பு நிலை மெல்ல திரும்பி உள்ளதை அடுத்து, ஜம்மு நகரில்  பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணி வரையில் 11 மணிநேரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் பாதுகாப்பு படை தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுமென அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை: மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளுடன் நாளை ஆலோசனை

3 ஆண்டுகளில் 44 பேரைக் கொன்ற பசு பாதுகாப்பு குண்டர்கள்: அதிர்ச்சிகர தகவல்

Recent Posts