
ஜனவரி 8,9 ஆகிய நாட்களில் திட்டமிட்டபடி எழுத்துத் தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார். நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணிகளில் அடங்கிய கட்டடக்கலை / திட்ட உதவியாளர் பணிக்கு ஜனவரி 8ல் தேர்வு நடைபெறவுள்ளது. இதேபோல் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு ஜனவரி 9ம் தேதி தேர்வு நடைபெறுகிறது. போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.