மறைந்த முன்னாள் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேக்கு இறுதி மரியாதை..

மறைந்த முன்னாள் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயின் அதிபாரபூர்வ இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமையன்று (27 செப்டம்பர்) நடைபெற்றுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வருகையளித்த 700 பேர் உட்பட சுமார் 4,300 பேர் இந்நிகழ்வுக்கு வருகை தந்தனர்.

சில வாரங்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்ட திரு அபேயின் அதிகாரபூர்வ இறுதிச் சடங்கு சென்ற ஆண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெற்ற நிப்போன் புடோக்கான் வளாகத்தில் நடைபெற்றது.

நிப்போன் புடோக்கான் வளாகம் ஜப்பானின் போர்க்கால வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படும் யாசாக்குனி வழிபாட்டுத் தளத்திற்கு சிறிது தூரம் தொலைவில் அமைந்துள்ளது.

சிங்கப்பூர் நேரப்படி இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணிக்குத் தொடங்கியது.

வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து முடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..

கோட்டையூர் பேரூராட்சி 4வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் திருமதி.பொன்னழகு மணி பாஜகவில் இணைந்தார்..

Recent Posts