தனது நாட்டு தீவு ஒன்றைக் காணவில்லை : ஜப்பான் அறிவிப்பு..

Japan’s coast guard has launched a search mission to find an island off its northernmost coast that has unexpectedly vanished – taking Tokyo’s territorial claims with it.


ஜப்பான் நாடு தனது தீவு ஒன்றை காணவில்லை என்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு கடலோர காவல் படை விடுத்துள்ள செய்தி குறிப்பில்,

ஜப்பானின் வடக்கு முனையில் ஹோகிடோ தீவுக்கு அருகில் இருந்த எசாமி ஹனகிட்டோ ஹோஜிமா என்ற குட்டித் தீவை காணவில்லை என்ற கூறப்பட்டுள்ளது.

கடந்த 1987-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நில அளவின் படி அந்த தீவு ஜப்பானுடன் இணைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து நாலரை அடி உயரத்தில் இருந்த அந்த தீவை இப்போது காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவுடனான கடல் எல்லை தாவா உள்ள நிலையில் தீவு காணாமல் போனதால், எல்லை பிரச்சனை மேலும் அதிகரிக்கும் என ஜப்பான் கவலை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்த குட்டித்தீவு கடலில் மூழ்கி இருக்குமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு வேலை நிறுத்த அறிவிப்பை ஒத்திவைப்பதாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் அறிவிப்பு…

தீபாவளியையொட்டித் தாம்பரம் – திருநெல்வேலி பகல்நேர முன்பதிவில்லாச் சிறப்பு ரயில்…

Recent Posts