முக்கிய செய்திகள்

ஜெ., பிறந்த நாளான பிப்., 24-ஆம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்து, தமிழக அரசு, ஆணை..

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்து, தமிழக அரசு, ஆணை பிறப்பித்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் ஜெயலலிதா பெண் குழந்தைகளுக்கு ஆற்றிய சேவையை நினைவு கூரும் வகையில் அவரது பிறந்த நாள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அனுசரிக்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் பிப்ரவரி 24-ஆம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்று பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், மனிதச் சங்கிலிகள், பேரணிகள், கருத்தரங்கங்கள், வீதி நாடகங்கள் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.