முக்கிய செய்திகள்

ஜெ.,மரண வழக்கு விசாரணை : ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனு தாக்கல்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் விசாரித்து வருகிறது.

இந்த விசாரணைக்கு ஜெயலலிதா சகிச்சைபெற்ற அப்பலோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் வழக்கிற்கு தடை கோரி மனு தாக்கல் செய்தது

இந்த வழக்கு குறித்து பதில் மனு அளிக்க உச்சநீதிமன்றம் ஆறுமுக சாமி ஆணையத்திற்கு சம்மன் அனுப்பியது.

இந்த வழக்கு பற்றிய விசாரணைக்கு தடை கேட்டுள்ள அப்போலோ கோரிக்கையில் உள்நோக்கம் உள்ளது

என்று உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.