முக்கிய செய்திகள்

ஜெ., மரண விசாரணை ஆணையத்தில் தம்பிதுரை ஆஜர்..

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்நேற்று ஆஜராகி விளக்கமளித்தார்.

6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில், அவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அதன்படி, விசாரணை ஆணையத்தில் தம்பிதுரை இன்று ஆஜராகி விளக்கமளித்து வருகிறார். தம்பிதுரையிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.