ஜெ., இல்லத்தை முதல்வர் அலுவலகமாக மாற்ற உயர்நீதிமன்றம் பரிந்துரை..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் அமைந்துள்ள வேதா இல்லத்தை நினைவிடமாக்க தமிழக அரசு கையகப்படுத்தியது.
இதனையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேதா நிலையத்தின் ஒருபகுதியை நினைவிடமாக்கலாம். மற்ற பகுதியை முதல்வரின் அலுவலமாக பயன்படுத்தலாம் என பரிந்துரை செய்தார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா,மகன் ஜெ.தீபக் 2-ம் நிலை வாரிசுகளாக அறிவித்த நீதிபதிகள். ஜெயலலிதாவின் சொத்துகளின் ஒரு பகுதியை அறக்கட்டளை அமைத்து செயல்படுத்தலாம் எனத் தெரிவித்தார்..
இது குறித்து 8 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க அவகாசம் கொடுத்து வழக்கினை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.