முக்கிய செய்திகள்

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை..


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென வெள்ளிக்கிழமை இரவு சோதனை நடத்தினர். போயஸ் கார்டனில் 3 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் வசித்த அறையில் சோதனை நடைபெற்றது.

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வசித்து வரும் அடையாறு வீட்டில் சில தினங்களுக்கு முன்பு சோதனை நடைபெற்றது. இதனையடுத்து அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் போயஸ் தோட்ட வீட்டில் பூங்குன்றன் வசித்த அறையில் 3 அதிகாரிகள் சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது ஜெயா டிவி நிர்வாகியும் இளவரசி மகனுமாகிய விவேக்கும் உடனிருந்தார். கடந்த வியாழக்கிழமை முதல் 5 நாட்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் சசிகலாவின் உறவினர்கள், ஜெயாடிவி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக இந்த சோதனை நடத்தப்பட்டது.