முக்கிய செய்திகள்

ஜெ.,வாழ்ந்த போயஸ் இல்லத்தை யாரும் களங்கப்படுத்தக் கூடாது : தம்பிதுரை..


மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லத்தை யாரும் களங்கப்படுத்தக் கூடாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். கரூரில் இரட்டை வாய்க்கால் பகுதியை பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சோதனை தொடர்பாக யார் தவறு செய்தாலும் ஏற்புடையது அல்ல என்று கூறியுள்ளார். வருமானவரித்துறை சோதனை தொடர்பாக தமிழக முதலமைச்சரை சந்தித்து கலந்து பேச உள்ளேன் என்றும் தம்பிதுரை கூறியுள்ளார்.