முக்கிய செய்திகள்

ஜெ. நினைவு இல்லத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு..


ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமையாக்க எதிர்ப்பு தெரிவித்தும், இது குறித்து வெளியிடப்பட்ட தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரியும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால், அவருக்கு அரசு செலவில் நினைவிடம் அமைக்கக்கூடாது எனக்கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

சென்னை அருகே கோவளத்தில் ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வணிக நோக்கில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்புடன் கோவளத்தில் ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது.