முக்கிய செய்திகள்

ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் : வருமான வரித்துறை அதிகாரிகள்..


ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை, தஞ்சாவூர் ,திருச்சி உள்ளிட்ட இடங்களில் சசிகலா குடும்பத்தினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று நவ.,9 காலை 6 மணியில் இருந்து 14 மணிநேரமாக சோதனை நடந்து வருகிறது. சோதனையில் ஆந்திரா புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுமார் ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில் ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சரிபார்க்கும் பணி நடைபெறுவருகிறது, தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.அறந்தாங்கி அருகே தினகரன் ஆதரவாளர் வீட்டில் நடந்த சோதனை நிறைவடைந்துள்ளது.