ஜெயலலிதா பிறந்த நாள் விழாவுக்கு பேனர் வைக்க அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பேனர்கள் வைக்க அனுமதி அளிக்கசென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

விதிமீறல் பேனர்களுக்கு எதிரான வழக்குகளில் சாலைகளில் பேனர்கள் வைக்க நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்துள்ளனர்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது வரும் 24-ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பேனர்கள் வைக்க அனுமதி கோரி

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. பாலகங்கா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதனை நிராகரித்த நீதிபதிகள் நீதிமன்ற உத்தரவின் மாண்பு காக்கப்பட வேண்டும் என்றனர்.

அப்போது தமிழகம் முழுவதும் சட்டவிரோத பேனர்களை அகற்றுவது தொடர்பாக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

சட்டவிரோத பேனர்களை அகற்றுவது மட்டுமன்றி தடுப்பதும் அரசின் கடமை என்ற நீதிபதிகள், அரசின் அறிக்கை திருப்திகரமாக இல்லை என்றும் புதிதாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

முறைப்படுத்தப்படாத முதலீட்டு திட்டங்களுக்கு தடை மசோதா : மக்களவையில் நிறைவேற்றம்..

குஜ்ஜார் சமூக இட ஒதுக்கீடு மசோதா : ராஜஸ்தான் சட்டப் பேரவையில் தாக்கல் ..

Recent Posts