முக்கிய செய்திகள்

ஜெ., சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடையில்லை..

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகத்தை ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது.

இந்நிலையில் அப்பலோ நிர்வாகம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடைவிதிக்க வேண்டும் என்றும் விசாரணைக்கு மருத்துவக்குழு அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கின்“ தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடையில்லை என்றும்

விசாரணை ஆணையத்தின் அறிக்கை வெளிவந்த பின் அது குறித்து சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.