ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் விசாரணை ஆணையத்தில் ஆஜர்..


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன், ஜெ. மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஜரானார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த, நீதிபதி அ.ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 90-க்கும் மேற்பட்டோர் மனுக்களாகவும், பிரமாண பத்திரங்களாகவும் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

அதன் அடிப்படையில் முன்னாள் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவில் இருந்த ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் நாராயணபாபு, மருத்துவக் கல்வி இயக்குனர் விமலா, மயக்கவியல் துறை பேராசிரியை கலா, அரசு மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. ஜெ.தீபக், மருத்துவர் சுதா சேஷய்யன், அப்பல்லோ மருத்துவர் சத்யபாமா உள்ளிட்டோர் விசாரணை ஆணையத்துக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். பூங்குன்றன் கடந்த 17 ஆண்டுகளாக ஜெயலலிதாவுக்கு உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.40 குறைவு..

தினகரன் வெற்றியை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

Recent Posts