முக்கிய செய்திகள்

ஜெ.,வின் தற்போதைய சொத்து மதிப்பு என்ன? : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய வழிகாட்டுதல் மதிப்பு எவ்வளவு என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பான விசாரணையில் ஜெயலலிதாவின் குடும்ப வாரிசு என்ற முறையில், தங்களை ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நியமிக்கக்கோரி தீபா, தீபக் ஆகியோர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அத்துடன் ஜெயலலிதா வரி பாக்கி வைத்திருந்தாலும் அதனை செலுத்தத் தயார் எனவும் கூறியிருந்தனர்.

இந்நிலையில் ஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய வழிகாட்டுதல் மதிப்பு எவ்வளவு என சென்னை உயர்நீதிமன்றம்கேள்வி எழுப்பியுள்ளது.

அத்துடன், அதுதொடர்பாக மதிப்பீடு செய்து ஆகஸ்ட் 5-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.